மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் திருப்பரங்குன்றத்துக்கு சென்றது. திருப்பரங்குன்றம் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அரசு பேருந்து மீது தாழ்வாக சென்ற மின்கம்பி உரசியது. மேலும் அந்தக் கம்பி அறுந்து பேருந்தின் மீது விழுந்தது. இதை அறிந்த ஒட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனே இறக்கி விடப்பட்டனர். ஓட்டுநர் சுதாரித்து பேருந்தை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. அதையடுத்து மாற்று பேருந்தில் பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டனர்.