இயக்குநர் அமீர் தனது சமூக வலைத்தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மாணவர்களின் எதிர்காலத்திற்கும் பொதுச் சமூகத்திற்கும் எந்தவித பயனும் அளிக்காத திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் அறிமுக விழாக்களைக் கல்வி நிறுவன வளாகங்களில் நடத்த அரசு தடை விதிக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் பங்கேற்று கருத்துரை வழங்க ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.