மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சித்தராக வழிபடும் டிடிவி தினகரன்

586பார்த்தது
திருவண்ணாமலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சித்தராக நினைத்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வழிபடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்ணை ஏற்கனவே சிலர் சித்தர் ஆக நினைத்து வழிபடும் சம்பவங்கள் திருவண்ணாமலையில் நடந்து வருகிறது. அந்தப் பெண் டீயை குடித்துவிட்டு கப்பை தூக்கி எறிந்தால் அதை எடுத்து தலையில் தீர்த்தமாக ஊற்றிக் கொள்வது, அந்தப் பெண்ணின் காலில் விழுவது என அருவருக்கத்தக்க சம்பவங்கள் நிறைய நடந்து வருகின்றன. இந்நிலையில், அவரை ஒரு கட்சியின் தலைவர் வழிபடுவது பொது மக்களுக்கு தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி