எமனை நேரில் பார்த்த இளைஞர்.. திக் திக் வீடியோ

65பார்த்தது
ராஜஸ்தானின் தோல்பூர் அருகே மே 23 அன்று எதிர்பாராத விபத்து நடந்தது. பாசாய் நவாப் நகரில் உள்ள மேனியா சாலையில் தரப் சிங் என்ற இளைஞர் சாலையைக் கடந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் தரப் சிங்கை அந்த கார் அடித்து தூக்கியது. விபத்தின் தீவிரம் காரணமாக காற்றில் தூக்கி வீசப்பட்டு அவர் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக அந்த இளைஞரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.