இந்தியாவில் தயாராகும் ரேஞ்ச் ரோவர் - விலை குறைய வாய்ப்பு

81பார்த்தது
இந்தியாவில் தயாராகும் ரேஞ்ச் ரோவர் - விலை குறைய வாய்ப்பு
டாடா மோட்டார்ஸ் துணை நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் இனி ரேஞ்ச் ரோவர் மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்களை இந்தியாவில் தயாரிக்கும் என கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் 54 ஆண்டு கால வரலாற்றில் பிரிட்டனுக்கு வெளியே தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். உள்ளூர் உற்பத்தியுடன், அவற்றின் விலை 18 - 22 விழுக்காடு குறையும் என தெரிகிறது. இதன் மூலம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டின் விலை ரூ.1.9 கோடியில் இருந்து ரூ.1.4 கோடியாகவும், ரேஞ்ச் ரோவர் ரூ.3.3 கோடியில் இருந்து ரூ.2.6 கோடியாகவும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.