நாக தோஷம் இருப்பவர்களின் பார்வையில் அடிக்கடி நாகம் தென்படும். தோஷம் இருப்பவர்களுக்கு திரும
ணத்தடை, கணவன் மனைவியிடையே பிரிவினை, குழந்தை பேறு இல்லாதது, பிள்ளைகளால் மன உளைச்சல், தீராத நோய், பரம்பரை வியாதி, குடும்பத்தில் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு இன்னல்களை அனுபவிப்பர். அவர்கள் நாக சதுர்த்தியன்று நாகர்களை மனமுருக வழிபட்டால், தோஷங்கள் நீங்கும். பல தலைமுறைகளாக தொடரும் சாபத்திலிருந்து விடுபடுவதற்கு நாகசதுர்த்தி உகந்த வழிபாடு.