உலகிலேயே 4-வது பெரிய ரயில்வே நெட்வொர்க்கை கொண்டிருக்கும் நாடு இந்தியா. 1,32,310 கிலோ மீட்டர்கள் நீளம் ரயில் பாதையும், 7,335 ரயில் நிலையங்களையும் உள்ளடக்கியது. இதில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயர், "புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரயில் நிலையம்" ஆகும். இதுவே நாட்டிலேயே மிக நீளமான பெயரைக் கொண்டிருக்கும் ரயில்வே ஸ்டேஷன் ஆகும்.