“ராமர் ஆட்சியின் நீட்சி திமுக ஆட்சி"

82பார்த்தது
“ராமர் ஆட்சியின் நீட்சி திமுக ஆட்சி"
ராமர் ஆட்சியின் நீட்சிதான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திமுகவின் ஆட்சி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் ரகுபதி, திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடியாக நாங்கள் ராமனைப் பார்க்கிறோம். சமூக நீதியும் எல்லோருக்கும் சமம் என்று போதித்தவர் ராமன். அவரது ஆட்சியில் ஏற்றத்தாழ்வு இல்லாமல் அனைவரும் சமம் என்று இருந்தது, அப்படிதான் திமுக ஆட்சியும் தற்போது நடைபெற்று வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி