தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி மறுக்கப்பட்டது தொடர்பாக திமுக எம்.பி. தமிழச்சி கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “NEP மூலம் ஹிந்தி திணிக்கப்படுகிறது என்பது தவறானது. பாஜக ஆளாத மாநிலங்கள் கூட NEP-ஐ ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ்நாட்டு மாணவர்களை, திமுக தவறாக வழிநடத்தி அரசியல் செய்கிறது” என்றார். இதனால், “தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்காதே” என திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.