திருச்செந்தூரில் ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு

66பார்த்தது
திருச்செந்தூரில் ஐம்பொன் நடராஜர் சிலை கண்டெடுப்பு
திருச்செந்தூர் அருகே ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள சீர்காட்சி பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் (60). இவர் நேற்று (மே 30) காலையில் தனது வீடு அருகே மரக்கன்று நடுவதற்காக பள்ளம் தோண்டினார். அப்போது சுமார் 1½ அடி ஆழத்தில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை தென்பட்டுள்ளது.

சிதிலமடைந்த நிலையில் அந்த சிலை காணப்படுகிறது. இதுகுறித்து அவர் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் திருச்செந்தூர் தாசில்தார் பாலசுந்தரம் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you