வேடசந்தூர்: குடகனாறு அணைக்கு வினாடிக்கு 1707 கனஅடி நீர்வரத்து

64பார்த்தது
வேடசந்தூர் அருகே அழகாபுரியில் 27 அடி கொள்ளளவு கொண்ட குடகனாறு அணை கட்டப்பட்டுள்ளது. அணை 26 அரை அடி நிரம்பிய நிலையில், அணைக்கு வினாடிக்கு ஆயிரத்து 707 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை முதல் தொடர் மழை பெய்ததால் நேற்று மாலை 2:00 மணி நிலவரப்படி வினாடிக்கு ஆயிரத்து 707 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. மேலும் தொடர்ந்து நீர் வரத்து பகுதிகளில் மழை பெய்து கொண்டே இருப்பதால் அதிக அளவில் தண்ணீர் வர வாய்ப்புள்ளது. 

இதனை அடுத்து அணையில் இருந்து வினாடிக்கு 2000 கன அடி நீர் தண்ணீர், 3, 4, 5, 6, 7, 8 என 6 ஷட்டர்கள் மூலம், குடகனாற்றில் திறந்து விடப்பட்டது. குடகனாறு அணையின் உதவி பொறியாளர் மகேஸ்வரன் அணையின் மறுபக்கம் ஆற்றங்கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி