கேரள மாநிலம் பாலக்காடு ஒற்றப்பாலத்தில் சாலையோரமாக நிறுத்தப்பட்ட கார் விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கார் ஓட்டி வந்த பெண் கடைக்கு சென்ற நிலையில், காரில் இருந்த சிறுமி காரை இயக்கியுள்ளார். சிறுமி கியரை மாற்றி ஆக்சிலேட்டரை அழுத்திய நிலையில் கார் முன்னோக்கி சென்றது. அங்கிருந்த நபர் காரை நிறுத்த முயற்சித்த நிலையில் தடுமாறி விழுந்தார். நல்வாய்ப்பாக கார் முன்னே இருந்த சுவற்றில் மோதி நின்றது. இதன் காரணமாக பெரும் விபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது.