திருப்பத்தூர்: வாணியம்பாடியில் பாஜக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியை சேர்ந்த நடிகர் சரத்குமார் இன்று (டிச. 14) கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறும் போது, "மணிப்பூர் விவகாரத்தை மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதாக விஜய் சொன்னார், உண்மையில் இந்த விஷயத்தில் அரசு சிறப்பாக செயல்படுகிறது. இது போன்ற கருத்துகளை விஜய் சொல்லும் போது சிந்தித்தும் புரிந்துகொண்டும் பேச வேண்டும்" என்றார்.