கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்

70பார்த்தது
கிறிஸ்தவ மக்கள் முன்னணி சார்பாக மாநிலத் தலைவர் மரியா ஆரோக்கியம் தலைமையில் இன்று(செப்.9) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் சிந்தலக்குண்டு கிராமம் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி, தாமரைக்குளம் பகுதியில் மூன்று தலைமுறையாக வசித்து வருகிற கிறிஸ்துவ வன்னிய சமூகத்தைச் சேர்ந்த மயில் குஞ்சு குடும்பம், அருள்ஞானப்பிரகாசம் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

அவர்களின் பராமரிப்பில் உள்ள விளைநிலத்தில் வேல்முருகன் என்பவர் சமீபத்தில் உள்ளே நுழைந்து போலியாக ஆவணங்களை தயார்செய்து கிறிஸ்துவ வன்னியகுல அருள்ஞானப்பிரகாசம் வகையறாக்களின் நிலத்தை அபகரிக்க முயலும் திண்டுக்கல் காளிமுத்துப் பிள்ளை சந்து இரண்டாவது தெருவைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணங்கள் மூலம் உண்மைத்தன்மையை மறைத்துப் பதிவு செய்யப்பட்டுள்ள போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரியும் கிறிஸ்துவ வன்னிய மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யது நடவடிக்கை எடுக்குமாறு மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் கிறிஸ்துவ மக்கள் முன்னணியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி