திண்டுக்கல் மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த ரம்ஜான் இவரது மகன் இப்ராகிம் பட்டதாரி இளைஞர், வேடசந்தூரில் அமைந்திருக்கக் கூடிய தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ரோஜா என்பவரிடம் 10 பவுன் நகையை அடகு வைத்து ரூ. 4 லட்சம் ரூபாய் பணத்தை இப்ராஹிம் உடைய தாயார் ரம்ஜான் தந்துள்ளார்.
இந்த 4 லட்ச ரூபாய் பணத்திற்காக இவர்களும் இருந்த 10 பவுன் தங்க நகையை அடகு வைத்து ரோஜா என்பவரிடம் கொடுத்துள்ளனர்.
இவர்களிடமிருந்து 4 லட்சம் ரூபாய் பணத்தை பெற்று விட்டு வேலை வாங்கி தராமல் மோசடி செய்துள்ளார். அடகு வைத்த நகைக்கு வட்டி கட்டி வருகின்ற காரணத்தினால் இப்ராஹிம் குடும்பத்தினர் மன உளைச்சலில் ஆளாகினர்.
இப்ராஹிம் உடைய தாயார் ரம்ஜான் பணத்தை பெற்று தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.