“தமிழர்களை அவமரியாதை செய்வதை பாஜக நிறுத்த வேண்டும்”

76பார்த்தது
“தமிழர்களை அவமரியாதை செய்வதை பாஜக நிறுத்த வேண்டும்”
பொங்கல் பண்டிகை அன்று யுஜிசி - நெட் தேர்வு நடைபெறும் என அறிவித்துள்ள ஒன்றிய அரசுக்கு திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கல். ‘பசிக்கின்ற நல் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா’ என்று கலைஞரால் போற்றப்படும் விழாவினை பாஜக அரசு அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி