1999 ஆம் ஆண்டு இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் நடந்த கார்கில் போரில் நாட்டின் ஒரு பகுதியை கைப்பற்ற நினைத்த பாகிஸ்தான் ராணுவத்தினர் 4000 பேரை அழித்து நம் நாட்டுக்காக போரிட்டு வீர மரணம் அடைந்த 527 இந்திய ராணுவ வீரர்களுக்கு வெள்ளி விழா ஆண்டு நினைவு தினமான இன்று தேசிய முன்னாள் ராணுவத்தினர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பழனியில் உள்ள அலுவலகத்தில் ராணுவ வீரர்களின் திரு உருவப்படத்திற்கு வீர வணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. முன்னதாக பழனி தாலுகா அலுவலகத்தில் இருந்து முன்னாள் ஜராணுவ வீரர்களின் சங்க அலுவலகம் வரை முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஊர்வலமாக வந்தனர்.