நாடாளுமன்றத் தேர்தலில் இறுதிக் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் தேர்தல் தொடர்பான வேலைகளில் தேர்தல் அலுவலர்கள் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் போலீசார் இன்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தேர்தல் பிரச்சாரத்திற்காக பழனிக்கு வந்து தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கிய நபர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தினர். மேலும் தங்கும் விடுதிகளில் வெளியூர் நபர்களுக்கு அறைகள் ஒதுக்கும்போது தேர்தல் தொடர்பான பிரச்சாரத்திற்கு வருகை தருகிறார்கள் என்று விவரத்தை கேட்டு அறை ஒதுக்க வேண்டும் என கூறி சோதனையில் ஈடுபட்டனர்.