பழனியில் திரையரங்குகள் முன்பு ரசிகர்கள் ரகளை.

75பார்த்தது
நடிகர் விக்ரம் நடித்துள்ள வீரதீரசூரன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திரைப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இன்று திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்து மேளதாளங்கள் முழங்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென நடிகர் விக்ரம் நடித்த வீரதீரசூரன் படம் திரையிடுவதற்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதன் காரணமாக திரையரங்குகளில் இன்று திரைப்படம் வெளியிடாமல் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக பழனியில் ரயில்வே பீடர் சாலையில் உள்ள வள்ளுவர் திரையரங்கு முன்பு கூடியிருந்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். மேலும் தங்களின் தலைவர் விக்ரம் படத்தை உடனடியாக திரையிட வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கு முன்பு ஒன்று கூடி கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி