மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

75பார்த்தது
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் மற்றும் வழங்கப்படும் உதவிகள் குறித்து விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை காலை 10: 30 மணி அளவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மாவட்ட அலுவலர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம் ஆடி கலைஞர்கள் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கான நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, நவீன செயற்கை கை, கால், பேட்டரி சக்கர நாற்காலி, வங்கி கடன், கல்விக்கடன் உள்ளிட்ட அரசின் 32 வகையான திட்டங்கள் குறித்து பாடல்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பார்வை குறைபாடு, காது கேளாதோர், மன வளர்ச்சி குன்றியவர்கள், தொழுநோய் உள்ளிட்ட பல்வேறு குறைபாடு உடையவர்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களுக்கு திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, சுயதொழில், கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து இரண்டு நாட்கள் சிறப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் இன்று தொடங்கியது என்று தெரிவித்தார்.

டேக்ஸ் :