வேடசந்துார் எம். எல். ஏ., காந்திராஜன் தலைமையில் பஸ் ஸ்டாண்டை தற்காலிகமாக மாற்றி அமைக்கவும், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்குமான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் பஸ் ஸ்டாண்டை தற்காலிகமாக ஆத்துமேட்டில் செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் பேசிய எம். எல். ஏ., காந்திராஜன், "புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க தமிழக அரசு ரூ. ஒரு கோடியே 19 லட்சம் ஒதுக்கியுள்ளதாகவும், டிச. 5 ல் அதற்கான பூமி பூஜை போட உள்ளதாகவும்" தெரிவித்தார். இந்நிகழ்வில் தாசில்தார் சுல்தான் சிக்கந்தர், ஆர்.டி.ஓ., சண்முகஆனந்த், செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், இன்ஸ்பெக்டர் வேலாயுதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.