சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று நகைக் கடைகள் மூடல்

80பார்த்தது
சென்னை, புறநகர் பகுதிகளில் இன்று நகைக் கடைகள் மூடல்
ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (நவ.30) நகைக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் கடைகளை மூடுவதாக சென்னை நகை மற்றும் வைர வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் தற்போது மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் காற்றுடன் நீடிக்கும் கனமழை பெய்து வருகிறது. இன்று மாலை ஃபெஞ்சல் புயலானது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி