ஃபெஞ்சல் புயல்: எருமைகளுடன் ஊருக்குள் வந்த குட்டி யானை

72பார்த்தது
இலங்கையில் பெய்துவரும் கனமழையால் தமது கூட்டத்திலிருந்து பிரிந்த காட்டு யானைக்குட்டி ஒன்று, எருமைகளின் கூட்டத்துடன் சேர்ந்திருக்கிறது. இந்த யானைக்குட்டி எருமைகளுடன் சேர்ந்து திவுலான கிராமத்தில் உள்ள மாட்டுத்தொழுவத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 4 அல்லது 5 வயதுடைய சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த யானைக் குட்டியை, காட்டுக்குள் விடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி