கேரளா மாநிலத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், தாயார் வீட்டில் இல்லாத நேரத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துவந்துள்ளார். இதில் மனமுடைந்த சிறுமி போலீசில் புகாரளித்துள்ளார். இந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக கேரளா சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி அஷ்ரப் ஏ.எம் முன்னிலையில் விசாரணைக்கு வந்த நிலையில், குற்றவாளிக்கு 141 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7.85 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளார்.