ஃபெஞ்சல் புயல் தாக்கம் காரணமாக நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்தப் புயல் இன்று மாலை அல்லது நாளை காலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிச.10ஆம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என அத்துறைக்கான அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.