வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஃபெஞ்சல் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. அடுத்த 3 மணி முதல் 4 மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு அறிவிக்கப்பட்ட அதிகனமழை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் இரவு 10 மணி வரை மிதமான மழையே பெய்யும் என இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதிகனமழை எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டாலும், பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எச்சரிக்கப்பட்டுள்ளது.