பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையின் அலுவலகத்தில் செவிலியர் பயிற்சி மாணவிகள் மற்றும் அலுவலக பெண்கள் பயன்படுத்தும் கழிப்பறை உள்ளது. பெண் செவிலியர் ஒருவர் கழிப்பறைக்கு சென்றபோது சுத்தம் செய்யும் பிரஸ்ஸில் பேனா கேமரா இருப்பதை கண்டு அதிர்ந்தார். இது குறித்த புகாரின் பேரில் விசாரித்த போலீசார் அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் வெங்கடேஷ் (33) என்பவரை நேற்று (நவ. 29) கைது செய்தனர்.