ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மின்சாரம் பாய்ந்து 3 வது நபர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் சென்னை வியாசர்பாடி கணேசபுரம் பகுதியில் இசைவாணன் என்பவர் உயிரிழந்துள்ளார். சுரங்கப்பாதையில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த இசைவாணனின் உடல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஏற்கனவே மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்த நிலையில், 3 நபர் உயிரிழந்துள்ளார்.