சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று (நவ.30) ஃபெஞ்சல் புயல் காரணமாக பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இதனால் சென்னை ECR, OMR பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையறிந்த மாநகராட்சி ஊழியர்கள், சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து தேங்கிய மழைநீரை, மோட்டார் மூலம் அகற்றி வருகின்றனர். முன்னதாக, சுரங்கப்பாதைகளில் தேங்கிய தண்ணீரை அகற்றிய நிலையில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. தற்போது நகர் பகுதிகளில் மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.