UAEஇல் நடைபெற்று வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான U19 போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 13வயது இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷி 1 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் வீரர் அலி ராசா வீசிய பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். IPL-ல் ராஜஸ்தான் அணியால் ரூ.1.10 கோடிக்கு வாங்கப்பட்டதால், அவரின் அதிரடி ஆட்டத்தைக் காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்திய அணி தற்போது வரை 22 ஓவர்களில் 84/4 ரன்கள் எடுத்துள்ளது.