திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டி போகர் நகரில் அமைந்துள்ளது புகழ்பெற்ற பாதாள செம்பு முருகன் திருக்கோவில் 16 அடி ஆழத்தில் செம்பினால் செய்யப்பட்ட பாதாள முருகன் இருப்பது இக்கோவிலின் சிறப்பு இக்கோவிலில் தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்நிலையில்
செவ்வாய் கிழமையும் புரட்டாசி பெளர்ணமியை முன்னிட்டு ஆந்திரா, தெலுங்கான, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா பக்தர்கள் பாதாள செம்பு முருகனுக்கு கருங்காலி மாலை வாங்கி அணிவித்து சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்.