காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு

71பார்த்தது
காலை 10 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு
கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் இன்று (செப்., 18) காலை 10 மணிக்குள் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 - 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி