திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள வக்கம்பட்டியில் புனித மரிய மதலேனாள் தேவாலயம் உள்ளது. இந்தத் தேவாலயப் பகுதியில் உள்ள சில இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சிவசேனா மாநில இளைஞரணி பொதுச் செயலா் தமிழ்ச்செல்வன், உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா்.
இதையடுத்து, உயா்நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பேரில், ஆத்தூா் வட்டாட்சியா் முத்துமுருகன் தலைமையில், தேவாலயம் பகுதிகளில் அளவீடும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய் ஆய்வாளா் ஷா்மிளா, கிராம நிா்வாக அலுவலா்கள், நில அளவை அலுவலா்கள் கலந்து கொண்டனா். மேலும், திண்டுக்கல் ஏ. டி. எஸ். பி. தெய்வம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.