நாய்ஸ் (Noise) நிறுவனம் தற்போது அதன் ஆடியோ தயாரிப்பு சாதனங்களின் வரிசையில் புதிய சேர்ப்பாக நாய்ஸ் ஏர்வேவ் மேக்ஸ் 5 ஹெட்போன்ஸ் சாதனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது 40mm HiFi ஆடியோ டிரைவர்ஸ் உடன் வருகிறது. இது 3D ஸ்பிட்ஷியல் ஆடியோ அம்சத்துடன் ப்ளூடூத் 5.4 இணைப்புடன் இயங்குகிறது. இந்த ஹெட்போன்ஸ் சாதனம் 80 மணி நேரம் வரை பேட்டரி நேரத்தை வழங்குகிறது. இது Type-C சார்ஜிங் போர்ட் உடன் சார்ஜிங் இண்டிகேட்டர் லைட்டையும் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 4699ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.