இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி சென்னையில் இன்று (ஜன.25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை காண வந்துள்ள இங்கிலாந்து ரசிகர்கள் மைதானம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் வரிசையில் நின்று மது வாங்கி வருகின்றனர்.