மனிதர்களின் கால் நகங்களை விட கை நகங்கள் வேகமாக வளரும், இதன் வளரும் வேகம் 3 மடங்கு அதிகம். இதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, இதயத்திற்கு மிக குறைந்த தூரத்தில் கை நகங்கள் இருக்கின்றன. இதனால் அவற்றிற்கு ரத்த ஓட்டமும் ஆக்சிஜனும் தாராளமாக கிடைக்கின்றன. இரண்டாவது, கால்களை நாம் பயன்படுத்துவதை விட கைகளை அதிகம் பயன்படுத்துகிறோம். இதுவும் கைவிரல் நகங்களின் வேக வளர்ச்சிக்கு காரணம்.