பழனியில் பெண் பக்தர் மண்டியிட்டபடி கிரிவலம் - வீடியோ

1904பார்த்தது
பழனி வைகாசி கடைசி நாள் கிரிவலத்தை முன்னிட்டு கிரிவலப் பாதையில் 3 கிலோமீட்டர் பெண் பக்தர் மண்டியிட்ட படி கிரிவலம் வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அறுபடை வீடுகளின் மூன்றாம் படை வீடான பழனியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். வைகாசி விசாகத்தை முன்னிட்டு கிரிவலம் வருவது வழக்கமாக உள்ளது. பழனியில் சித்திரை மாதம் கடைசியில் 7 நாட்களும், வைகாசி மாதம் முதல் ஏழு நாட்களும் கிரிவலம் பக்தர்கள் வருவது உண்டு இந்நிலையில் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த பெண் பக்தர் சிவ நந்தினி என்பவர் மண்டியிட்டு கிரிவலப் பாதையில் 2. 45 கிலோமீட்டர் சுற்றி வந்தது பக்தர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பெண் பக்தர் கூறுகையில் நான் ஏற்கனவே பழனி மலைக்கோயில் படிக்கட்டுகளில் மண்டியிட்டு என் வேண்டுதலை முடித்தேன், அதைத் தொடர்ந்து இன்று கிரிவலப் பாதையில் 2: 45 கிலோமீட்டர் மண்டியிட்டு வேண்டுதலை முடித்து குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நல்லா இருக்கணும் அதை தொடர்ந்து ஊர் செழிப்பா இருக்கணும் என பெண் பக்தர் சிவ நந்தினி கூறி சென்றார்.

தொடர்புடைய செய்தி