திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் கீதா அவர்களுக்கு இன்று(செப்.10) கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா மற்றும் காவலர்கள் திண்டுக்கல் பழைய கரூர் சாலை பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கொத்தம்பட்டி அருகே திண்டுக்கல் மேற்கு கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த பாலன் (50) என்பவர் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் பாலனை கைது செய்து அவரிடமிருந்து 1250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.