உச்சநீதிமன்றத்தால் ஆக்கிரமிப்பு செய்த கடைகளை ஒரு வாரத்திற்கு முன்பாக நோட்டிஸ் மற்றும் ஒலிபெருக்கி மூலம் தெரியப்படுத்தி வந்த நிலையில் கொடைக்கானல் நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்து ஏரி சாலை வரை சுமார் ஐந்து கிலோ மீட்டருக்கு சாலையின் இரு புறம் ஆக்கிரமிப்பு கடைகளை இன்று அகற்றி வருகின்றனர்.
ஏரி சாலை மூஞ்சிக்கல் பகுதி வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் கடும் வாக்குவாதத்தில் பின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன.
தங்களுடைய வாழ்வாதாரம் அனைத்துமே கடையிலிருந்து தான் பெறுகிறோம் கடையை அகற்றினால் அரசிடம் வாங்கிய கடன் தொகை எவ்வாறு கட்ட முடியும் கடை இல்லை எனில் உணவிற்கே வழியில்லை பிள்ளைகளை எவ்வாறு வளர்க்க முடியும் என்று கதறும் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி வியாபாரிகள்.