லிப்டில் சிக்கிய டிரைவர் வெளியே வர முடியாமல் தவிப்பு

2611பார்த்தது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லிப்டில் சிக்கிய டிரைவர் வெளியே வர முடியாமல் தவிப்பு.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேளாண்மை துறை அலுவலகம் இரண்டாவது மாடியில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிபவர் அருண். இவர் திங்கட்கிழமை மதியம் 12: 30 மணியளவில் இரண்டாவது மாடியில் இருந்து லிப்ட் மூலம் தரை தளத்திற்கு வந்து கொண்டிருந்தார். கீழே வந்ததும் கதவு திறக்காமல் நின்றுவிட்டது.

பலமுறை முயன்றும் கதவு திறக்கவில்லை, இதனால் தனது செல்போன் மூலம் அலுவலகத்தில் உள்ள நண்பருக்கு தகவல் தெரிவித்தார். ‌ இந்த லிப்டில் ஆப்ரேட்டராக ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். ‌ அவர்தான் ஆட்களை மேலே ஏற்றி செல்வது மற்றும் கீழ்த்தலத்திற்கு கொண்டு வந்து விடுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வந்தார். ‌ அருண் லிப்டில் ஏறிய போது ஆப்ரேட்டர் இல்லாததால் கதவு பூட்டி கொண்டது. இதனைத் தொடர்ந்து ஆபரேட்டருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டார். சுமார் அரை மணி நேரம் லிப்ட்டிற்குள் சிக்கிக்கொண்ட அருண் ஆபரேட்டர் வந்ததும் மீட்கப்பட்டார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி