போதைப்பொருள் நடவடிக்கை.. துறை வாரியாக நடவடிக்கை

50பார்த்தது
போதைப்பொருள் நடவடிக்கை.. துறை வாரியாக நடவடிக்கை
போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக துறை வாரியாக செயல்திட்டம் வகுக்க தமிழக அரசு திட்டம்
சென்னையில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. துறைவாரியான செயல் திட்டங்களை வகுத்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். 'உள்துறை, சுகாதாரத்துறை, பள்ளிக் கல்வித்துறை உள்ளிட்டவை தனித்தனியே செயல்திட்டம் வகுத்துத்தர வேண்டும்' என சமூகநலன் - மகளிர் மேம்பாட்டுத்துறை, இளைஞர் மேம்பாட்டுத் துறையும் செயல்திட்டம் தரும்படி கோரப்பட்டுள்ளது. சென்னையில் போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி