தோலுடன் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு

57பார்த்தது
தோலுடன் சாப்பிடக்கூடிய வாழைப்பழம் கண்டுபிடிப்பு
ஜப்பானின் ஓகயாமாவைச் சேர்ந்த விவசாயிகள் மோங்கீ என்ற புதுவித வாழைப்பழத்தை உருவாக்கி வருகின்றனர். இந்த மோங்கீ வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை விட மிகவும் சுவையானது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோங்கீ வாழைப்பழம் சந்தைகளில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் அனைவராலும் இதை வாங்க முடியாது. ஏனெனில் இந்த வாழைப்பழத்தை அதிக அளவில் விளைவிக்க இயலவில்லை. ஒரு வாரத்திற்கு வெறும் பத்து வாழைப்பழங்களையே விளைவிக்க முடிகிறது. இந்த பழத்தின் தோல் மிகவும் மெலிதாக இருப்பதால் பழத்தோடு சேர்த்து தோலை எளிதாக சாப்பிட முடிகிறது.