இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.!

58பார்த்தது
இ-பாஸ் பெற்றவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியது.!
கொடைக்கானல் செல்ல 54,112 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் நாளொன்றுக்கு சராசரியாக 10 ஆயிரம் வாகனங்கள் இ- பாஸ் கேட்டு பதிவு செய்வதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி முதல் இ-பாஸ் பெற்றவர்கள் மட்டுமே கொடைக்கானலுக்கு செல்ல அனுமதி அளித்தனர். மே 7 முதல் இன்று வரை 9,555 வாகனங்கள் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 1,500 வாகனங்கள், 10 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானல் வருகின்றனர் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.