வெப்பத்தை தணிக்க வருகிறது மழை - வானிலை மையம்

21137பார்த்தது
வெப்பத்தை தணிக்க வருகிறது மழை - வானிலை மையம்
தமிழகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் கோடை வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. வரும் நாட்களில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இருப்பினும் தற்காலிகமாக பெய்து வரும் மழை மக்களுக்கு சற்று நிம்மதி அளித்துள்ளது. அந்த வகையில் இன்று (ஏப்ரல் 23) தென் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.