உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியுடன் பாராட்டு

69பார்த்தது
உறுப்பு தானம் செய்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவியுடன் பாராட்டு
திருச்சியின் நல்லாம் பிள்ளை வெள்ளிவாடி கிராமத்தை சேர்ந்த பிரான்ஸிஸ் சேவியர் ஸ்ரீரங்கன் என்பவர் கடந்த மாதம் 30ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது உடலை குடும்பத்தினர் தானம் செய்திருந்தனர். இந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினரை பாராட்டி கௌரவிக்கும் வகையில் திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பில் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு பாராட்டு சான்றிதழும், நிதி உதவியும் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி