
வடமதுரை: பாக்கி உள்ளது என வந்த தகவல்.. அதிகாரிகள் அதிர்ச்சி
வேடசந்தூர் எஸ்ஏபி நகரில் வேடசந்தூர் ஊராட்சி ஒன்றிய கூட்டுறவு நாணய கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வேடசந்தூர் மற்றும் எரியோடு வடமதுரை பகுதிகளில் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் கடன் பெற்றிருந்தனர். தாங்கள் வாங்கிய கடனை முழுவதுமாக அங்கு செயலாளராக பணியாற்றிய விக்னேஸ்வரனிடம் செலுத்தி அதற்கான ரசீதும் வைத்திருக்கின்றனர். இந்நிலையில் செயலாளர் விக்னேஸ்வரன் பணியில் இருந்த பொழுது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு தற்பொழுது தாங்கள் கடன் தொகை கட்டவில்லை பாக்கி தொகையை செலுத்த வேண்டும் என நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கடனை வாங்காமல் ஜாமீன் போட்ட ஒருவருக்கு நாலு லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதனை கட்ட வேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வேடசந்தூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டுறவு நாணய கடன் சங்க அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை என்பதால் முற்றுகையிட்டனர்.