தமிழ்நாடு அரசு பிப்ரவரி 24 முதல் முதல்வர் மருந்தகங்களை திறக்கவுள்ளது. சென்னையில் 33, மதுரையில் 52, கடலூரில் 49, கோவையில் 42, தஞ்சையில் 40 மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்வர் மருந்தகத்திற்கு தேவையான மருந்துகள் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் என்றும், தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் இருந்தும் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.