அக்டோபர் 2ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு சம்பந்தமாக திண்டுக்கல் கிழக்கு மரியநாதபுரத்தில் மகளிர் விடுதலை இயக்க மாவட்ட செயலாளர் சவேரியம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகர பொருளாளர் பால்ராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார். தொகுதி செயலாளர் பெர்னா நகர அமைப்பாளர் குமரேசன் நகரச் செயலாளர் ஆனந்தராஜ் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் இருதயராஜ் 34 ஆவது வார்டு முகாம் பொறுப்பாளர்கள் அருண் நிக்ஸன் முன்னிலை வகித்தார். திண்டுக்கல் மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா மாநில துணைச் செயலாளர் திருச்சித்தன் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் யுவராஜ் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இந்த தெருமுனை விளக்க பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசும் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த ஏராளமானோரின் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கையும் இழந்து தவிக்கின்றனர். எத்தனை லட்சங்கள் கொடுத்தாலும் எனது தாலிக்கு ஈடாகுமா? என பெண்களின் கதறல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கின்றது இது போன்ற சம்பவங்கள் இனி எங்கும் நடைபெறக்கூடாது என அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள இந்த மாபெரும் மது மற்றும் போதை பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டுக்கு அனைவரும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை காட்ட வேண்டுமென பேசினர்.