ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மீன்களில் அதிகம் காணப்படுகிறது. இந்த அமிலத்தை நம் உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது. உணவுகளில் இருந்தே பெற முடியும். ஒமேகா 3-ஐ தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் அபாயம் 40% குறைகிறது. அசைவம் சாப்பிடாத சைவப் பிரியர்கள், ஆளி விதை, சியா விதைகள், வால் நட், பாதாம், நிலக்கடலை, சோயா பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். இந்த உணவுகளை ஒமேகா 3 அமிலங்கள் அதிகம் காணப்படுகிறது.