ஜம்மு காஷ்மீர் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு

74பார்த்தது
ஜம்மு காஷ்மீர் இறுதிகட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் நிறைவு
ஜம்மு காஷ்மீரில் இறுதி கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் அக்.1ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இன்று (செப்.29) மாலையுடன் நிறைவடைகிறது. 90 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 3வது மற்றும் இறுதி கட்டமாக 40 தொகுதிகளுக்கு அக்.1-ம் தேதி தேர்தல் நடக்கிறது. 3 கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் அக்.8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்தி